Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 பிப்ரவரி (ஹி.ச.)
மார்ச் 5 ஆம் தேதியில் நேபாள நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனயடுத்து, தேர்தல் செயல்முறை, சுதந்திரமான, நியாயமான, அச்சமற்ற மற்றும் நம்பகமான சூழலில் நடத்தப்படுவதை உறுதி செய்யும்வகையில், இந்தியாவை ஒட்டியுள்ள பாங்கே மாவட்டத்தின் முழு பகுதியிலும் உள்ள அனைத்து எல்லைப் புறக்காவல் நிலைய நிலையங்களும் மார்ச் 2 ஆம் தேதி நள்ளிரவு முதல் மார்ச் 5 நள்ளிரவு வரையில் மூடப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் நிறுத்தப்படவுள்ளது.
ஆனால், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிற முக்கியமான பொருள்களின் இயக்கம் நிறுத்தப்படாது.
எல்லையில் ஏற்கெனவே கூடுதல் கண்காணிப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது.
அடையாள ஆவணங்களை முழுமையாகச் சரிபார்த்த பின்னரே,மக்கள் எல்லையைக் கடக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இருநாட்டு மக்களும், இந்தத் தடைக்காலத்தில் அவசியமின்றி எல்லையைக் கடப்பதைத் தவிர்க்குமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b