Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 27 பிப்ரவரி (ஹி.ச)
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த இலங்கை வாழ் தமிழ் இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏந்தியவாறு மோட்டார் படகில் சுற்றி வந்தனர்.
இந்தியா, இலங்கை இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த திருவிழாவில் இரு நாட்டை நேர்ந்த மீனவர்கள் உற்சாகமாக பங்கேற்று வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டும் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று (பிப்.27) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு படகுகள் கச்சத்தீவுக்கு புறப்பட்டன. இதில் 26 நாட்டுப் படகுகள் மற்றும் 90 விசை படகுகளில் 3,996 பயணிகள் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள சென்றனர்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கக்கூடிய பக்தர்களை மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார், சுங்கத்துறை அதிகாரிகள், கடலோர போலீசார், கியூ பிரிவு போலீசார் உள்ளிட்டோர் பக்தர்களை முழுமையான சோதனைக்கு உட்படுத்திய பின்னர் அனுமதித்தனர்.
அதே போல, இலங்கையில் இருந்தும் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், சிங்களர்கள் கச்சத்தீவுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து சென்ற பக்தர்களின் படகுகள் கச்சத்தீவை அடைந்த போது, இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து வந்த இலங்கை தமிழ் இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏந்தியவாறு மோட்டார் படகில் சுற்றி வந்தனர்.
மேலும், இதுகுறித்து இலங்கை தலைமன்னார் பகுதி இளைஞர்கள் கூறுகையில், ''கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்ள தலைமன்னார் பகுதியில் இருந்து வருகிறோம். தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் வெற்றி பெறும். தவெக தலைவர் விஜய்க்கு கடல் கடந்து எங்களது ஆதரவை தெரிவிக்கிறோம்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு இலங்கையில் கடல் கடந்த ஆதரவு இருப்பது தமிழ்நாட்டில் இருந்து சென்ற பக்தர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / ANANDHAN