Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 பிப்ரவரி (ஹி.ச.)
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ குற்றம் சாட்டியிருந்த முன்னாள் முதல்வர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உட்பட 23 பேரையும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசு தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் சொன்னது.
இதனைத் தொடர்ந்து, சிபிஐ வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எனக்கு எதிரான ஊழல் வழக்கு, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நடந்த மிகப்பெரிய அரசியல் சதி. ஆம் ஆத்மி கட்சியை முடிக்க மோடியும், அமித்ஷாவும் திட்டம் போட்டார்கள்.
ஆம் ஆத்மி கட்சி மற்றும் எங்கள் எல்லோரையும் நேர்மையானவர்கள் என நீதிமன்றம் சொல்லி உள்ளது. நான் உட்பட கட்சியின் முக்கியமான 5 தலைவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள்.
உண்மை ஜெயிக்கும் என்று நாங்கள் நம்பினோம். சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இது முழுவதும் பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையில் ஆதாரங்கள் எதுவும் சரியாக இல்லை என்று நீதிபதி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அதனால்தான் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் இரண்டு பேரைத் தவிர மற்ற 21 பேரையும் அவர் விடுதலை செய்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிபிஐ வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அழுதது நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / JANAKI RAM