பள்ளி வாகனம் மீது கனரக வாகனம் மோதிய விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய மருத்துவம் மற்றும் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் - சீமான்
சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச) இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் தனியார் பள்ளி வாகனம் மீது கனரக வாகனம் மோதிய விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய மருத்துவம் மற்றும் துயர்துடைப்பு நிதி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம்
Seeman


Hhw


சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச)

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் தனியார் பள்ளி வாகனம் மீது கனரக வாகனம் மோதிய விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய மருத்துவம் மற்றும் துயர்துடைப்பு நிதி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத்தொகுதி சத்திரக்குடியில் 33 குழந்தைகள் உட்பட 45 பேர் பயணித்த தனியார் பள்ளி வாகனம் மீது கருங்கற்கள் ஏற்றி வந்த கனரக வாகனம் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தலையில் பலத்த காயமடைந்தோடு, அதில் பயணித்த 35 குழந்தைகளும் உடலின் வெவ்வேறு இடங்களில் பலத்த காயமடைந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

இத்துயர நிகழ்வு தொடர்பாக கனரக வாகன ஓட்டுநர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவம் மற்றும் பராமரிப்பிற்கான துயர்துடைப்பு நிதியை வழங்க கனரக வாகன உரிமையாளரோ, அரசோ வழங்க முன்வரவில்லை என்பது கண்டனத்துக்குரியது.

இதனால் சத்திரக்குடி விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

ஆகவே, சத்திரக்குடி தனியார் பள்ளி வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய உயர் மருத்துவம் மற்றும் பராமரிப்புக்கு தேவையான நிதியை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ