Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)
அதிமுகவை நிர்வகித்து வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அக்கட்சியினர் இடையே மோதல் போக்கு உருவானது.
குறிப்பாக அதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமைப் பிரச்னை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
அதிமுக உரிமை மீட்பு குழுவை அமைத்து அவர் நடத்திய சட்டப் போராட்டமும் அவரது சாதகமான பலனளிக்கவில்லை.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று அக்கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்துள்ளார்.
ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்துக்கு சென்ற ஓபிஎஸ் மற்றும் ஐயப்பன் ஆகியோர் பேரவை செயலாளரை நேரில் சந்தித்து தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஐயப்பன் உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b