தியாகிகள் தினம் - சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத்துக்கு பிரதமர் மோடி அஞ்சலி
புதுடெல்லி, 27 பிப்ரவரி (ஹி.ச.) சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத் அவர்களின் தியாகத் திருநாளில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவில், சந்திரசேகர் ஆசாத் அவர்கள
தியாகிகள் தினம் - சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத்துக்கு பிரதமர் மோடி அஞ்சலி


புதுடெல்லி, 27 பிப்ரவரி (ஹி.ச.)

சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத் அவர்களின் தியாகத் திருநாளில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.

இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவில்,

சந்திரசேகர் ஆசாத் அவர்களின் வாழ்க்கை, அநீதிக்கு எதிராக துணிவுடன் நிற்பதே உண்மையான வீரம் என்பதை உணர்த்துகிறது.

நாட்டின் அடிமைத்தனத்தை நீக்க சந்திரசேகர் ஆசாத் எல்லாவற்றையும் தியாகம் செய்தார். அவருடைய உயர்ந்த தியாகத்தை எப்போதும் நினைவு கூர்வோம்.

சுதந்திரப் போராட்ட வீரர் தாய்நாட்டிற்காக செய்த தியாகத்தின் வரலாறு, நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும்.

என்று அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM