Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 27 பிப்ரவரி (ஹி.ச.)
வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.
அதன்படி நேற்றைய தினம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதாவின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தும், மேலும் வழக்கில் தொடர்புடைய சங்கீதா மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN