ஜீவனாம்சம் கேட்கும் சங்கீதா விஜய்-விவாகரத்து மனுவில் இடம்பெற்ற முக்கிய குறிப்புகள்!
செங்கல்பட்டு, 27 பிப்ரவரி (ஹி.ச.) நடிகையுடன் திருமணம் தாண்டிய உறவில் விஜய் இருந்ததாக அவரது மனைவி சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் மீது அவரது மனைவி ச
Sangeetha Vijay


செங்கல்பட்டு, 27 பிப்ரவரி (ஹி.ச.)

நடிகையுடன் திருமணம் தாண்டிய உறவில் விஜய் இருந்ததாக அவரது மனைவி சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விஜய், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

1998-ல் லண்டனில் பதிவுத் திருமணமும், 1999-ல் சென்னையில் இந்து முறைப்படி சடங்குகளுடனும் இவர்களது திருமணம் நடைபெற்றது.

25 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியருக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஆரம்ப காலங்களில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது இல்லற வாழ்க்கையில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் விரிசல் ஏற்படத் தொடங்கியதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கீதா தனது மனுவில், 2021 ஏப்ரல் மாதம் முதல் எதிர்மனுதாரர் (விஜய்) ஒரு நடிகையுடன் கொண்டுள்ள நெருக்கமான தொடர்பே குடும்பப் பிளவுக்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தனக்கு மிகுந்த மன உளைச்சலையும், ஏமாற்றத்தையும் அளித்ததோடு, பொதுவெளியில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அந்த நடிகை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள் தங்களையும் பிள்ளைகளையும் பாதித்ததாகக் கூறியுள்ளார்.

கடந்த 2021 முதல் விஜய் தன்னை உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புறக்கணித்து வருவதாகவும், தற்போது ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் தனித்தனியாகவே வாழ்வதாகவும்

(Constructive Desertion) அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவாகரத்து வழக்கில், தங்களுக்கு இடையேயான திருமணத்தை முறைப்படி ரத்து செய்ய வேண்டும் என்றும், தனது அந்தஸ்துக்கு ஏற்றவாறு நிரந்தர ஜீவனாம்சம் (Permanent Alimony) வழங்கப்பட வேண்டும் என்றும் சங்கீதா கோரியுள்ளார்

மேலும், இறுதித் தீர்ப்பு வரும் வரை தற்போது வசித்து வரும் நீலாங்கரை இல்லத்திலேயே தங்கியிருக்க அனுமதி வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடும்பத்தின் நற்பெயர் மற்றும் பிள்ளைகளின் நலனைக் கருதி, இந்த வழக்கின் விசாரணையை ரகசியமான முறையில் (In-camera proceedings) நடத்த வேண்டும் என்றும், ஊடகங்கள் இது குறித்து விவாதிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN