Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 பிப்ரவரி (ஹி.ச.)
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கல்வி அமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கு, டெல்லி நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
தீர்ப்பை முன்னிட்டு நீதிமன்றத்தில் ஆஜரான அரவிந்த் கேஜ்ரிவால் பின்னர் இல்லம் திரும்பினார். அப்போது அவர் மீது பூக்கள் தூவி அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா கேஜ்ரிவால் கூறியதாவது,
இன்று கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அரவிந்த் தனது வாழ்க்கையை நேர்மையுடன் வாழ்ந்துள்ளார். ஆனால், அவர்கள் (பாஜக) அரவிந்த் கேஜ்ரிவாலையும், அவரது நண்பர்களையும் சிறைக்கு அனுப்பினர். அவர்களின் பதவி வெறி அம்பலமாகிவிட்டது. உண்மை வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
என்று தெரிவித்தார்.
மேலும், அவர் தனது எக்ஸ் பதிவில் கூறுகையில்,
இந்த உலகில் ஒருவர் எவ்வளவு சக்தி படைத்தவராக மாறினாலும், அவரால் சிவனின் சக்தியை விஞ்ச முடியாது.
உண்மை எப்போதும் வெல்லும் என்று சுனிதா கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b