சிறுமியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
கோவை, 27 பிப்ரவரி (ஹி.ச.) கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே உள்ள திமுகவின் மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு இன்று நடைபெறவுள்ளது. இதில், 6 மாவட்டங்களைச் சேர்ந்த 1.50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தக் க
சிறுமியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்


கோவை, 27 பிப்ரவரி (ஹி.ச.)

கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே உள்ள திமுகவின் மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு இன்று நடைபெறவுள்ளது.

இதில், 6 மாவட்டங்களைச் சேர்ந்த 1.50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

அண்மையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் வழங்கிய சிறுமி வெண்பாவின் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்றார்.

அவரது பெற்றோரான கோவை மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் சோமு - சுகன்யா ஆகியோரை சந்தித்து சிறுமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

அப்போது, உறுப்பு தானம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதன் பிறகு, கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, போத்தனூர் செல்லும் வழியில் முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, காரில் இருந்து இறங்கிய அவர், பெண் தொண்டர்களுக்கு கைகொடுத்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.

போத்தனூர் பகுதியில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார்.

Hindusthan Samachar / vidya.b