அரசியல் லாபங்களுக்காக விசாரணை அமைப்புகளின் மாண்பை அடகு வைக்கும் பாஜக - முதல்வர் ஸ்டாலின்
சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச) டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் கல்வி அமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரை, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று விடுவித்தது. இந்த நிலையில் மத்தியில்
அரசியல் லாபங்களுக்காக விசாரணை அமைப்புகளின் மாண்பை அடகு வைக்கும் பாஜக - முதல்வர் ஸ்டாலின்


சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச)

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் கல்வி அமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரை, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று விடுவித்தது.

இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக விசாரணை அமைப்புகளின் மாண்பை அடகு வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அரவிந்த் கேஜ்ரிவால் விடுதலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,

ஒன்றிய பாஜக அரசு குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக விசாரணை அமைப்புகளின் மாண்பை அடகு வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சிறிதேனும் வெட்கம் கொள்ளுங்கள்.

நீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாக உண்மை வெளிப்படும் வரை அனைத்து நெருக்கடிகளையும் உறுதியோடு எதிர்கொண்ட மதிப்பிற்குரிய நண்பர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவுக்கு எனது பாராட்டுகள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b