என்னாது தாய் கழகமா? இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை,தி.மு.கவில் இணைந்த ஓ.பி.எஸ் குறித்து விமர்சித்த தமிழிசை சௌந்தர்ராஜன்
சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.) பாஜகவைச் சேர்ந்த வேலூர் சையத் இப்ராஹிம் எழுதிய பாரதம் 2014க்கு முன் இஸ்லாமியர்களின் நிலை குறித்தான புத்தகம் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ப
Tamilisai


சென்னை, 27 பிப்ரவரி (ஹி.ச.)

பாஜகவைச் சேர்ந்த வேலூர் சையத் இப்ராஹிம் எழுதிய பாரதம் 2014க்கு முன் இஸ்லாமியர்களின் நிலை குறித்தான புத்தகம் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,

இந்த புத்தகம் 168 பக்கம் உள்ளது.

தமிழிசை சௌந்தரராஜன் முழுமையாக இந்த புத்தகத்தை படித்து கூறிவிட்டார்.

இதன் பிறகு சொல்வதற்கு ஒன்னும் இல்லை, ரமலான் மாதத்தில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் குர்ஆன் இறக்கப்பட்டது ஏழாவது நாள் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

மதம் எதுவாக இருந்தாலும் மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும் மதம் எதுவாக இருந்தாலும் மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும் என்பது பழமொழி.

எல்லா மதமும் அன்பை தான் போதிக்கிறது.

சிறுபான்மையினர் வாக்கு வங்கிக்காக திமுக அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து வருகிறது.

அதை முறியடிக்கும் விதமாக வேலூர் இப்ராஹிம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் 100 ஆண்டுகள் வரை செயல்படும்.

இந்த கட்சிக்காக வேலூர் இப்ராஹிம் நிறையாக அர்ப்பணித்துள்ளார்.

ரமலான் மாதத்தில் நல்ல ஒரு வாய்ப்புகள் இறைவன் வேலூர் இப்ராஹிமுக்கு கொடுப்பார்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி பாஜக என்று திமுக கூறுகிறது.

ஆனால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான கட்சி பாஜக.

சிறுபான்மை இருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் எதிரான கட்சி பாஜக என்று கூறி வருகின்றனர்.

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான நாடு இந்தியா.

பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் உயரிய விருதுகள் பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது. முத்ரா வங்கி கடன் அதிகபடியாக இஸ்லாமிய பெண்கள் வாங்குகிறார்கள்.

எங்கள் மாவட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு மாமன் மாப்பிள்ளை என்று தான் பேசுவோம்.

நான் மக்காவுக்கு சென்று உள்ளேன் ஆனால் உள்ளே சென்றது இல்லை.

ஜீசஸ் பிறந்த இடம் உள்ளிட்ட பல இடங்களுக்கு நான் சென்று உள்ளேன் ஆகவே எல்லா மதமும் நமக்குத் தேவை. குறைத்து எந்த மதமும் பேசக்கூடாது என்பது எனது கருத்து.

ஐந்து கடமை யார் உண்மையாக பின்பற்றுகிறார்களோ அவர்கள் தான் உண்மையான முஸ்லிம்.

இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் போகக்கூடாது என்ற மக்காவில் ஒரு பக்கம் எழுதி இருக்கும்.என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன்,

வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஓபிஎஸ் அவர்கள் தனிப்பட்ட முறையில் அவர் மீது எவ்வளவு மரியாதை இருந்தாலும் தனது வாயால் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் தாய் கழகத்திற்கு வந்ததைப் போல உணர்கிறேன் என்று சொன்னது தாய்மையை கொச்சைப்படுத்துவதாக தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.

மரியாதைக்குரிய ஜெயலலிதா அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் எந்த கட்சியை எதிர்த்தாரோ எந்த கட்சி ஒரு பெண் என்றும் பாராமல் அவரை சட்டமன்றத்தில் மிக மோசமாக நடத்தினார்கள்.

அந்த கட்சிக்கு சென்று தன்னை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் தாய் கழகம் இணைந்ததைப் போல ஒரு உணர்கிறேன் என்று சொன்னால் அது தமிழகத்தில் உள்ள யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

இன்னும் சொல்லப்போனால் திமுக எந்த அளவில் தோல்வி பயத்தில் இருக்கிறது என்றால் இவர்களைப் போன்றவர்களை சேர்த்துக்கொண்டு அவர்கள் தான் திமுகவிற்கு மிகப்பெரிய பலம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார் என்றால் திமுகவின் பரிதாப நிலையை தான் எண்ண வேண்டி இருக்கிறது.

என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ