வால்பாறை முருகன் கோவிலில் மாசி மகம் 50-ஆம் ஆண்டு உற்சவ திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது
வால்பாறை, 27 பிப்ரவரி (ஹி.ச.) கோவை மாவட்டம் வால்பாறை ஸ்ரீ அருள்மிகு முருகன் திருக்கோவிலில் 50-ஆம் ஆண்டு மாசி மகம் விழாவானது கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இவ் விழாவில் பழனி பாதயாத்திரைழு சார்பாக சுமார்₹ 83 லட்சம் செலவில் வைர வேல் எம்ஜிஆர் நகர் ம
T


வால்பாறை, 27 பிப்ரவரி (ஹி.ச.)

கோவை மாவட்டம் வால்பாறை ஸ்ரீ அருள்மிகு முருகன் திருக்கோவிலில் 50-ஆம் ஆண்டு மாசி மகம் விழாவானது கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

இவ் விழாவில் பழனி பாதயாத்திரைழு சார்பாக சுமார்₹ 83 லட்சம் செலவில் வைர வேல் எம்ஜிஆர் நகர் மாரியம்மன் கோவில் இருந்து வைர வேலை சிவாச்சாரியார் தோளில் சுமந்த வண்ணம் மேளதாளம் முழங்க முக்கிய வீதியான காந்தி சிலை மெயின் ரோடு நகராட்சி அலுவலகம் வழியாக கோயில் வளாகத்தை வந்தடைந்தது.

பின்னர் உற்சவ விழாவாக நடைபெற்றது இந்நிகழ்வில் முருக பக்தர்கள் முருகனின் கொடியை எடுத்து கோவில் வளாகத்தை மூன்று முறை சுற்றி வந்து தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கொடிக்கம்பத்திற்கு பால் தேன் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் வழிபாடுகள் நடத்தப்பட்டது கோவிலில் மூன்று படியாக கொடியேற்றம் துவங்கப்பட்டது.

அதில் முதற்படி விநாயகருக்கும் இரண்டாம் படி அவருடைய தந்தையான சிவபெருமானுக்கும் மூன்றாம் படி அவருடைய இளைய குமாரர் முருகனின் திருவாசகங்களுடன் அரோகரா முருகனுக்கு அரோகரா வால்பாறை முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்களுடன் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர் மேலும் இரண்டு நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் அதன் பின்னர் இங்கிருந்து பாதயாத்திரை குழு பழனி வரை நடந்து செல்லும் பக்தர்கள் இந்நிகழ்வில் வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J