மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் கல்லூரி மாணவியின் தற்கொலைக்கு தூண்டியதாக இளைஞர் மீது வழக்குப் பதிவு
பால்கர், 27 பிப்ரவரி (ஹி.ச.) மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ஜனவரி 29-ஆம் தேதி விரார் ரயில் நிலையத்தில் 19 வயது பெண் ஒருவர்,ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்துகொண்டார். அந்த பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், வாஷிமில் இருக்கும
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் கல்லூரி மாணவியின் தற்கொலைக்கு தூண்டியதாக இளைஞர் மீது வழக்குப் பதிவு


பால்கர், 27 பிப்ரவரி (ஹி.ச.)

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில்

ஜனவரி 29-ஆம் தேதி விரார் ரயில் நிலையத்தில் 19 வயது பெண் ஒருவர்,ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அந்த பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், வாஷிமில் இருக்கும் அந்த இளைஞர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 108-ன் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞர் கடந்த வருடம் ஆன்லைன் விளையாட்டு மூலம் அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி அவளுடன் உடல் உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண்ணின் தாயார் தனது புகாரில், அந்த இளைஞர் தன்னுடைய மகளை திருமணம் செய்துகொள்ளாமல் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவருடைய மகள் கர்ப்பமாகி மன உளைச்சலுக்கு ஆளானதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அந்தப் பெண் இறக்கும்போது கர்ப்பமாக இருந்தது மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

20 வயது இளைஞர் ஒருவரை காதலித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM