Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 28 பிப்ரவரி (ஹி.ச.)
திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் கொங்குநாடு கல்வி நிறுவனங்களில் 'நக்ஷத்ரா உற்சவ் 2026 நட்சத்திர கலை விழா இன்று நடைபெற்றது.
விழாவினை கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.எஸ்.கே ஆர்.பெரியசாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,
ரசிகர்கள் கொடுக்கும் உற்சாகத்தால் தான் 20 வருடமாக இசையமைத்து கொண்டு இருக்கிறேன்.
100 படங்களுக்கு மேல் பணிபுரிந்து உள்ளேன்.
ரசிகர்கள் அளிக்கும் உற்சாகத்தால் ஒவ்வொரு படமும் முதல் படத்தில் பணிபுரிவது போல் உணர்கிறேன்.
ஒரு கலைஞனுக்கு நீங்கள் கொடுக்கும் உற்சாகம் கௌரவம் அளிக்கிறது.
மேலும், மேலும் ஊக்கப்படுத்துகிறது என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளுடன் ஜி.வி.பிரகாஷ் குமார் திரைப்பட பாடல்களை பாடி உற்சாகப்படுத்தினார்.
பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
Hindusthan Samachar / Durai.J