மார்ச் 28-ஆம் தேதி தொடங்கும் 2026 ஐபிஎல் சீசன்
சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.) ஐபிஎல் 2026 சீசன் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. முன்னதாக, இது மார்ச் 26-ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, இரண்டு நாட்கள் கழித்து, மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என
மார்ச் 28-ஆம் தேதி தொடங்கும் 2026 ஐபிஎல் சீசன்


சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)

ஐபிஎல் 2026 சீசன் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. முன்னதாக, இது மார்ச் 26-ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, இரண்டு நாட்கள் கழித்து, மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமாக, இந்த நேரத்தில் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு தமிழ்நாடு, கொல்கத்தா, அசாம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், எல்எஸ்ஜி அணிகளின் மைதானங்களைக் கொண்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால், போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு போட்டி அட்டவணையை முழுமையாக வெளியிட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து, 2009, 2014, 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றபோது, ஐபிஎல் தொடருக்கான தேதி அட்டவணை இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்த முறையும் அதே திட்டத்தை செயல்படுத்தலாமா அல்லது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை காத்திருக்கலாமா என்பது குறித்து பிசிசிஐ விரைவில் முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM