Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 பிப்ரவரி (ஹி.ச.)
குரூப்-2, 2ஏ வேலைகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2025 செப்டம்பர் 28-ல் நடைபெற்றது.
இந்த நிலையில் குரூப்-2ஏ மெயின் தேர்வு 2026 மார்ச் மாதம் 15-ஆம் தேதி காலையிலும், குரூப்-2, 2ஏ தமிழ் தகுதித் தேர்வு அன்றைய தினம் மாலையிலும் நடைபெறவுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி, மெயின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தாத சில தேர்வர்களுக்கு மறுவாய்ப்பு மார்ச் மாதம் 5-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை டி.என்.பி.எஸ்.சி வழங்கியுள்ளது.
இது பற்றி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் ஓ.டி.ஆர். மூலமாக தேர்வு கட்டணத்தை குறிப்பிட்ட நேரத்துக்குள் செலுத்துமாறு டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடபிரியா அறிவுறுத்தியுள்ளார்.
இது ஒரு கூடுதல் வாய்ப்பு என்பதால், கடைசி நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க முன்கூட்டியே கட்டணம் செலுத்துவது நல்லது என்று டி.என்.பி.எஸ்.சி கூறியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b