திருச்சி என்ஐடியில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு - மார்ச் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
திருச்சி, 28 பிப்ரவரி (ஹி.ச.) திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் மற்றும் இளநிலை பொறியாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்
திருச்சி என்ஐடியில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு - மார்ச் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


திருச்சி, 28 பிப்ரவரி (ஹி.ச.)

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் மற்றும் இளநிலை பொறியாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவன அறிவிப்பின் படி, மொத்த காலிப்பணியிடங்கள் 22 ஆகும்.பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஇ., பி.டெக் அல்லது எம்சிஏ அல்லது டிப்ளமோ முடித்திருப்பவர்கள், கலை, அறிவியல், வணிகம், நூலக அறிவியல் பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள், சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 25.3.2026 தேதியின்படி டெக்னீசியன் பணிக்கு 27 வயதிற்குள்ளும், டெக்னிக்கல் உதவியாளர், இளநிலை பொறியாளர் பணிக்கு 30-க்குள்ளும், முதுநிலை டெக்னீசியன் பணிக்கு 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.500, இதர அனைத்து பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

https://www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் சுய சான்று செய்யப்பட்ட புகைப்படம், தேவையான நகல் சான்றிதழ்களை இணைத்து The Registrar, National Institute of Technology Tiruchirappalli, Tiruchirappalli-620015, Tamil Nadu என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை தெளிவாக பெரிய எழுத்துக்களில் குறிப்பிடவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.3.2026 ஆகும். ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி நாள்: 31.3.2026 என திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b