பிஜி நாட்டில் நடைபெறவுள்ள காமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா பங்கேற்பு
புதுடெல்லி, 3 பிப்ரவரி (ஹி.ச.) பிஜி நாட்டின் நாடி நகரில் எதிர்வரும் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை காமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, இந்தியாவைச் சேர்ந்த அமைச்சர்கள், அட்டர்னி ஜெனரல்கள் மற்றும் அரசு அதிகா
வருகிற 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பிஜி நாட்டில் நடைபெறவுள்ள காமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா பங்கேற்பு


புதுடெல்லி, 3 பிப்ரவரி (ஹி.ச.)

பிஜி நாட்டின் நாடி நகரில் எதிர்வரும் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை காமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக, இந்தியாவைச் சேர்ந்த அமைச்சர்கள், அட்டர்னி ஜெனரல்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தரப்பிலிருந்து பிரதிநிதிகள் குழு பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தகவலை தி காமன்வெல்த் அமைப்பு தனது அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. மாநாட்டை நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய பிஜி அரசுக்கு, காமன்வெல்த் பொதுச்செயலாளர் ஷர்லி போச்வே தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில், மக்களின் அன்றாட வாழ்வை வலுவான சட்ட வழிமுறைகள் எவ்வாறு பாதுகாக்கின்றன என்பது குறித்து சட்ட அமைச்சர்கள் விரிவாக ஆலோசிக்க உள்ளனர்.

மேலும், ஜனநாயகத்தில் மக்களின் பங்கேற்புத் திறன், சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான வருவாய் ஈட்டுதல், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தில் மக்கள் வாழ்வதற்கான உரிமை போன்ற முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.

உலக அளவில் சட்டத்தின் ஆட்சி குறைந்து வரும் சூழ்நிலையில் இந்த மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

நீதியை அணுகுவதை மேம்படுத்தவும், சட்டத்தின் ஆட்சியை நவீனப்படுத்தவும் தற்போதைய நடைமுறைகளை அமைச்சர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, நிலையான சமூகம், மேம்பட்ட பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஆதரிக்கும் சட்ட கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசனை செய்யப்பட உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM