Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 3 பிப்ரவரி (ஹி.ச.)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், கடந்த 1-ம் தேதி பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை சமர்ப்பித்து உரையாற்றினார்.
அப்போது, அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றம் எனும் உன்னத இலக்குடன் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
பெண்களின் மேம்பாட்டுக்கு இந்த பட்ஜெட்டில் முதன்மையான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடுகளுக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசாங்கத்தின் துறைகளிலேயே பாதுகாப்புத் துறைக்குத்தான் அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, ஒன்றிய பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவாக பாதுகாப்புத் துறைக்கு சுமார் ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்த ஒன்றிய பட்ஜெட்டில் ஏழைகளுக்கு எதுவுமே இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறை கூறினார்.
இந்நிலையில், கேரளாவிற்கு இந்த ஒன்றிய பட்ஜெட்டில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதனை எதிர்த்து, மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்த அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (3-ம் தேதி) அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கருப்பு கொடிகள் ஏற்றப்படும்.
மேலும், இந்த மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM