ஒரு பெரிய திரை அனுபவத்தை வழங்கும் ஆட்டோ கீஸ்டோன் 300 இன்ச் 4K ப்ரொஜெக்டர்
சென்னை, 3 பிப்ரவரி (ஹி.ச.) தற்போது அமேசான் வலைத்தளத்தில் அமேசான் வேர்ல்ட் கப் சேல் எனும் பெயரில் ஒரு பிரத்யேக விற்பனை நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ப்ரொஜெக்டர் சாதனங்களுக்கு கவ
ஒரு பெரிய திரை அனுபவத்தை வழங்கும் ஆட்டோ கீஸ்டோன் 300 இன்ச் 4K ப்ரொஜெக்டர்


சென்னை, 3 பிப்ரவரி (ஹி.ச.)

தற்போது அமேசான் வலைத்தளத்தில் அமேசான் வேர்ல்ட் கப் சேல் எனும் பெயரில் ஒரு பிரத்யேக விற்பனை நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு விற்பனையில் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் ப்ரொஜெக்டர் சாதனங்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, இ கேட் நிறுவனத்தின் 4K ப்ரொஜெக்டர் மாடலுக்கும் கணிசமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அமேசான் தளத்தில் இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடலுக்கு தற்போது 57% தள்ளுபடி வழங்கப்பட்டு, இது ரூ.15,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட சில வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை இஎம்ஐ முறையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 கூடுதல் தள்ளுபடியும் உண்டு. எனவே, வாடிக்கையாளர்கள் இந்த இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடலை குறைந்த விலையில் பெற்று பயனடையலாம்.

இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்:

இந்த நவீன இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K எச்டிஆர் ரெசல்யூஷனைக் கொண்டுள்ளது. HDR + மற்றும் HLG ஆகிய மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களும் இதில் உள்ளன. இதன் காரணமாக இந்த சாதனம் சிறந்த திரை அனுபவத்தை வழங்குகிறது.

மேலும், இந்த இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடலில் 500 ஐஎஸ்ஒ லுமன்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளது. கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளைக் காண இந்த ப்ரொஜெக்டர் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்பாக, இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் நேர்த்தியாக உள்ளது.

ஆம்லாஜிக் 950D4 மற்றும் குவாட் கோர் பிராசஸருடன் இந்த இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறனை உறுதி செய்கிறது. மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இதில் உள்ளது. மேலும், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வசதியுடன் இந்த இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரை ப்ரொஜெக்சன் செய்து கொள்ள முடியும். எனவே, 100 இன்ச் மற்றும் 150 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த ப்ரொஜெக்டர் மாடல் ஒரு பெரிய திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த ப்ரொஜெக்டருடன் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும். ஆட்டோ போகஸ், ஆட்டோ கீஸ்டோன், ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ், ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் உள்ளிட்ட பல நவீன வசதிகள் இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடலில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் இதில் பயன்படுத்த முடியும்.

உயர்தர ஒலி அனுபவத்திற்காக 10W பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் போர்ட், புளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த சாதனத்தில் உள்ளன.

அனைத்து சிறப்பம்சங்களையும் உள்ளடக்கிய இந்த இ கேட் டஸ்டர் 5எக்ஸ் ப்ரோ மாடல் தற்போது குறைந்த விலையில் கிடைப்பதால், வாங்குவதற்கு ஏற்றதாக இருக்கும்.

Hindusthan Samachar / JANAKI RAM