Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 03 பிப்ரவரி (ஹி.ச.)
கடந்த ஜனவரி 28 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி 1ம் தேதி 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போது கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடக்கிறது
இன்று (பிப்ரவரி 03) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. லோக்சபாவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதே
நேரத்தில் ராஜ்சபாவில் அலுவல் நேரம் நடந்து வருகிறது.
அவையை துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கவனித்து வருகிறார்.
ராஜ்யசபாவில் இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து எழுப்ப அவை தலைவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
Hindusthan Samachar / vidya.b