பாஜகவே அண்ணாமலையை மறந்து விட்டது, பிறகு எப்படி அவரது கருத்துகள் மக்கள் மத்தியில் எடுபடும் - அமைச்சர் சேகர்பாபு
சென்னை, 03 பிப்ரவரி (ஹி.ச.) அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர்கள் பங்கேற்றன
பாஜகவே அண்ணாமலையை  மறந்து விட்டது, பிறகு எப்படி அவரது கருத்துகள் மக்கள் மத்தியில் எடுபடும் - அமைச்சர் சேகர்பாபு


சென்னை, 03 பிப்ரவரி (ஹி.ச.)

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர்கள் பங்கேற்றனர்.

பொது விருந்தை மேயர் பிரியா தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது,

கருணாநிதி உடல் நிலை குன்றி பேச முடியாமல் இருந்தபோது கூட அண்ணாதான் தனக்கு பிடித்தமானவர் என்று கூறினார்.

விரைவில் திறப்பு விழா காணவுள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அண்ணா பெயர் சூட்டப்பட உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் , தலைவர்கள் பலர் தங்களுடைய பெயர்களை தாங்கள் கட்டும் கட்டடங்களுக்கு சூட்டிக் கொள்கின்றனர். ஆனால் தமிழக முதல்வர், தமிழகம் உயர காரணமாக இருந்த தலைவர்கள் பெயரை பல்வேறு நலத்திட்டம் , கட்டடங்களுக்கு சூட்டி வருகிறார்.

அண்ணா பெயரை தாங்கியுள்ள கட்சிகளை காட்டிலும் திமுக அதிகமாக அண்ணாவின் பெயரை சூட்டி உள்ளது.

அண்ணாமலை திமுகவை ஊழல் கட்சி என விமர்சிப்பதாக கேட்கிறீர்கள் , அண்ணாமலை பாஜகவில் என்ன நிலமையில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பை கூட வேண்டாம் என கூறிவிட்டார்.

அண்ணாமலை பாஜக என்ற கட்சி வேண்டும் என்று செல்கிறாரா வேண்டாம் என்று செல்கிறாரா என்றே தெரியவில்லை.

பாஜகவே அண்ணாமலையை மறந்து விட்டது, பிறகு எப்படி அவரது கருத்துகள் மக்கள் மத்தியில் எடுபடும்?

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b