சபரிமலை தங்கம்‌ கொள்ளை வழக்கு - கைதான தந்திரிக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை
திருவனந்தபுரம்‌, 3 பிப்ரவரி (ஹி.ச.) சபரிமலை ஐயப்பன் ஆலயத்தின் தங்கம்‌ கொள்ளை வழக்கில் முதன்மையான குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போத்தியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த காரணத்தால், தந்திரி ராஜீவரரு கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் பூஜப்ப
சபரிமலை தங்கம்‌ கொள்ளை வழக்கு - கைதான தந்திரிக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை


திருவனந்தபுரம்‌, 3 பிப்ரவரி (ஹி.ச.)

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தின் தங்கம்‌ கொள்ளை வழக்கில் முதன்மையான குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போத்தியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த காரணத்தால், தந்திரி ராஜீவரரு கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் பூஜப்புரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவ உதவி அளிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்று முன் தினம் மறுபடியும் நெஞ்சு வலி உண்டானதால் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் இன்று திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்கின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM