Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 03 பிப்ரவரி (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிறிஸ்தவ ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பட்டாபிராமைச் சேர்ந்த மோசஸ் (29) என்பவர், முன்விரோதம் காரணமாக தேவாலயத்திற்குள் புகுந்து கிறிஸ்தவ ஊழியர் ஈனோஸ் (62) என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளி மோசஸுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜூலியட் புஷ்பா தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஓரளவு நீதி கிடைத்ததாக கருதப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN