Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 03 பிப்ரவரி (ஹி.ச.)
கடந்த ஜனவரி 28 ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன், பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது.
2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பா.ஜ, மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் பிப்ரவரியில் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றும், இன்றும் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று
(பிப்ரவரி 03) டில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், இந்தியப்பொருட்கள் மீதான அமெரிக்க வரிக்குறைப்புக்கு முயற்சி மேற்கொண்ட பிரதமருக்கு எம்.பி.க்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b