Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு சுந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நாடாளுமன்றத்தில்
மத்திய பட்ஜெட்டை திமுக முழுமையாக படிக்க வேண்டும்.
பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு எதுவும் தரவில்லை என்று திமுக கூறுவது மக்களை ஏமாற்றும் முயற்சி.
மக்கள் படித்தவர்கள்,அவர்கள் பட்ஜெட்டை படித்து உண்மையை புரிந்து கொள்வார்கள் என்றார்.
பாராளுமன்ற நேரத்தை வீணாக்காமல் முக்கியமான விஷயங்களை பேச வேண்டும்.
இது வரை அவர் முக்கியமான எந்த விவாதத்தை முன்வைத்துள்ளார் என்பதை காங்கிரஸ் கூட சொல்ல முடியுமா? என விமர்சனம் செய்தார்.
தமிழகத்தில் போதைப் பொருட்கள் எளிதாக கிடைக்கிறது, பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கும் டாஸ்மாக் மூலம் மதுபானம் கிடைப்பது கவலைக்குரியது.
தமிழக அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கிறதென்றால் அது டாஸ்மாக் மூலமாகத்தான்.
நான் கட்சியின் துணைத் தலைவர். கட்சி என்ன பணியை தருகிறதோ அதை செய்வேன். எந்த தொகுதி என்பது முக்கியமல்ல.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற உழைப்பேன் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான்.
அதில் எந்த மாற்றமும் இல்லை.
நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது,
மேடை நாகரீகம் என்று ஒன்று உள்ளது. நடிகராக இருப்பதும், அரசியல் தலைவராக இருப்பதும் வேறு. அது அவரது தனிப்பட்ட கருத்து.
அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.
திமுக–காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்த குஷ்பு,
எவ்வளவு நாள் தான் முதுகை சொரிந்து கொண்டு இருக்க முடியும். அந்த கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்றே சந்தேகம் உள்ளது எனக் கூறினார்.
எஸ்.வி. சேகர் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அவர்,
பாடல் பாடியதற்காக விமர்சனம் செய்வது ஏற்கமுடியாது என தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J