பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவிடம் எடப்பாடி பழனிசாமி உடல் நலம் விசாரித்தார்
சென்னை, 04 பிப்ரவரி (ஹி.ச.) கடந்த ஜனவரி 30 சென்னை கிண்டியில் தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும் அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான எச். ராஜா (68) திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவா் அருகில் உள்ள தனியாா் மருத்
பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவிடம்  எடப்பாடி பழனிசாமி உடல் நலம் விசாரித்தார்


சென்னை, 04 பிப்ரவரி (ஹி.ச.)

கடந்த ஜனவரி 30 சென்னை கிண்டியில் தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும் அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான எச். ராஜா (68) திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவா் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளை ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால் அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அவரை அரசியல் தலைவர்கள் பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

அண்மையில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் எச். ராஜாவை இன்று நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அதிமுகவின் வேலுமணி, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b