Enter your Email Address to subscribe to our newsletters




புதுடெல்லி, 04 பிப்ரவரி (ஹி.ச.)
இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் இளைஞர்களிடையே உரையாடலை ஊக்குவிக்கவும், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் தொடங்கப்பட்ட ஒரு முக்கிய தளமாகும்
(யுவ சம்வாத்)நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதில்,நல்லொழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் கூட்டுப் பொறுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி
ஆர்.எஸ்.எஸ்.இணை
பொதுச்செயலாளர்
அருண் குமார்,
நாம் ஒவ்வொரு நொடியும் தேசத்திற்காக வாழ வேண்டும், இளைஞர்கள் தங்களை தேசிய சேவைக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மத்திய வேளாண் பல்கலைக்கழகம் (CAU), இம்பால் ஏற்பாடு செய்த “சங்கத்தின் பாதை: 100 ஆண்டுகள் சேவை” என்ற தலைப்பில்,
இரோயி செம்பாவில் உள்ள வேளாண் கல்லூரி அரங்கில் நடைபெற்ற யுவ சம்வாத் நிகழ்வில் இளைஞர் கலந்துரையாடல் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக
ஸ்ரீ அருண்குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
இந்திய அரசியலமைப்பு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவான இந்திய நாகரிகப் பயணத்தில் உருவெடுத்த ஆழமான “கூட்டு மனச்சாட்சி” அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கண்ணோட்டம் ராஷ்ட்ர நிர்மாணத்தின்
தேச உருவாக்கம் அடிப்படையாக தனிநபர் மேம்பாடு இருப்பதையே மையமாகக் கொண்டுள்ளது.
மகத்தான மனிதர்கள் மகத்தான தேசங்களை உருவாக்குகிறார்கள்.
குடிமக்களிடையே நெறிமுறை வலிமை, ஒழுக்கம் மற்றும் சமூக பொறுப்பு இல்லையெனில் அரசியல் சுதந்திரம் மட்டும் நாட்டின் எதிர்காலத்தை உறுதி செய்ய போதாது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர் டாக்டர் கேஷவ் பாலிராம் ஹெட்கேவரின் நோக்கத்தை நினைவுகூர்ந்த ஸ்ரீ அருண்குமார்,
தனிநபர் மற்றும் சமூக மாற்றத்தின் மூலம் மக்கள் மற்றும் தேசத்தை ஒன்றிணைப்பதே அதன் இலக்கு.
நாம் ஒன்றுபடாவிட்டால், சுதந்திரம் பெற்ற பிறகும் மீண்டும் அடிமைப்படும் அபாயம் உள்ளது என அவர் எச்சரித்தார்.
தேச மறு உயிர்ப்புக்கான பாதையை விளக்கிய அவர், பண்பாட்டு அடையாளத்தை உணர்தல், தேசத்தை முதன்மையாகக் கருதுதல், ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தைப் பேணுதல், சவால்களுக்கு விழிப்புணர்வுடன் இருத்தல், காலனித்துவ சிந்தனைகளின் மீதமுள்ள தாக்கங்களை கடந்து செல்லுதல் ஆகிய ஐந்து முக்கிய பண்புகளை எடுத்துரைத்தார்.
தன் பாரம்பரியத்தில் நம்பிக்கையை இழப்பது சமுதாயத்தை பலவீனப்படுத்தும்,
அடையாளத்தை மீண்டும் கண்டுபிடிப்பது கூட்டுத் துணிச்சலை வலுப்படுத்தும் என அவர் கூறினார்.
பஞ்ச பரிவர்த்தன் ஐந்து சமூக மாற்றங்கள் என்ற கொள்கையை விளக்கினார்.
சமூக சமரசம்,குடும்ப மதிப்புகளை வலுப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட சுய விழிப்புணர்வு மற்றும் பொறுப்புள்ள குடிமக்கள் நடத்தை,
ஒழுக்கம், சட்டத்தின் மீது மரியாதை மற்றும் குடிமை உணர்வு கட்டாயமாக அல்ல.
பெருமைக்குரியதாக பார்க்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இளைஞர்கள் நோக்கமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என ஊக்குவித்த ஸ்ரீ அருண்குமார்.
ஒரு வாழ்க்கை – ஒரு இலக்கு என்ற கொள்கையை முன் வைத்து,ஒவ்வொரு இளைஞரும் குறைந்தது ஒரு முக்கிய சமூக சவாலுக்கு தீர்வு காண தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் முன்னேற்றத்தை உறுதி செய்யவும் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுதல் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடல் அமர்வில், வேலை வாய்ப்பு குறித்து பேசும் போது,
வேளாண்மை, தொழில்திறன் மற்றும் தொழில்முனைவோரை குறைவாக மதிப்பிடும் சமூக மனப்பான்மையும் வேலைவாய்ப்பு சிக்கலுக்கான காரணங்களில் ஒன்று என அவர் கூறினார்.
இளைஞர்கள் நடைமுறைத் திறன்களை வளர்த்துக்கொண்டு, வேலை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என்றும், கூட்டுறவு இயக்கங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
டிஜிட்டல் கவனச்சிதறல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
மாணவ வாழ்க்கையை சாதனையின் ஒரு காலமாக விவரித்து, உடல் ஆரோக்கியம், மனத் தெளிவு மற்றும் இயல்பான திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட கேள்வி–பதில் அமர்வுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இது இளைஞர் தலைமையிலான தேச உருவாக்கம் மற்றும் சமூக மாற்றம் என்ற செய்தியை வலுவாக பிரதிபலித்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மத்திய வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அனுபம் மிஸ்ரா தலைமை தாங்கினார்.
இந் நிகழ்வில்,பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அழைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J