Enter your Email Address to subscribe to our newsletters

கொழும்பு, 4 பிப்ரவரி (ஹி.ச.)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் 7ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் மாதம் 8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.
மொத்தம் 20 குழுக்கள் பங்கேற்று விளையாடவுள்ள இத்தொடரில் வெற்றிக் கோப்பையை தன்வசமாக்கப் போகும் அணி எதுவென்ற ஆவல் விளையாட்டு ரசிகர்களிடையே மேலோங்கி உள்ளது.
இந்நிலையில், இத்தொடருக்கான இலங்கை அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தசுன் ஷனகா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி:
தசுன் ஷனகா, பதும் நிசங்கா, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்கா, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, மதீஷான் சமீரா.
Hindusthan Samachar / JANAKI RAM