Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 4 பிப்ரவரி (ஹி.ச.)
நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ஆம் தேதி குடியரசுத் தலைவரின் உரையுடன் ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து, 2026-27 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 1-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.
முந்தைய நாள் முதல் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியா - அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவையில் திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கினர்.
இதற்கிடையில், நேற்று சீன ஊடுருவல் பற்றி விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், மக்களவையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்கள் கூட்டத்தொடர் முடியும் வரை பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM