சத்தீஸ்கரில் செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்ததால் ஆத்திரத்தில் காதலனை கொலை செய்த காதலி
சத்தீஸ்கர், 4 பிப்ரவரி (ஹி.ச.) சத்தீஸ்கரில் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர், தன்னுடைய கைபேசி எண்ணை தடை செய்த காதலனை அவன் வீட்டுக்கே தேடி சென்று நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. நீண்ட நாட்களாக கா
சத்தீஸ்கரில் செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்ததால் ஆத்திரத்தில் காதலனை கொலை செய்த காதலி


சத்தீஸ்கர், 4 பிப்ரவரி (ஹி.ச.)

சத்தீஸ்கரில் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர், தன்னுடைய கைபேசி எண்ணை தடை செய்த காதலனை அவன் வீட்டுக்கே தேடி சென்று நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவருக்கும் இடையில் சமீப காலமாக மனஸ்தாபம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, காதலன் அவளுடைய கைபேசி எண்ணை பிளாக் செய்ததாக தெரிகிறது.

இதன் விளைவாக மன வருத்தத்திற்கும் மிகுந்த கோபத்திற்கும் ஆளான காதலி, காதலன் தன்னை மறந்து வேறொரு பெண்ணுடன் பேசுவதாக நினைத்து இந்த மாதிரியான கொடூரமான செயலில் இறங்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அந்தப் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM