Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 5 பிப்ரவரி (ஹி.ச.)
இந்தியத் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 24ஆம் தேதி டெல்லியில் மாநில தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பிரம்மாண்ட மாநாடு கால் நூற்றாண்டு இடைவெளிக்குப் பிறகு நடைபெறவிருக்கிறது.
இது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 24 அன்று மாநில தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாட்டை நடத்தவுள்ளது.
புது டெல்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாநில தேர்தல் ஆணையர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாடு சுமார் 25 வருடங்களுக்கு பிறகு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு கடைசியாக 1999ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு மாநாடு நடத்தப்பட்டது.
தலைமை தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் அவர்கள் இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கி துவக்க உரையில் மாநில தேர்தல் ஆணையர்களிடையே உரையாற்ற உள்ளார்.
தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்வீர் சிங் சந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் இந்த நிகழ்வில் முன்னிலை வகிப்பார்கள்.
இந்த மாநாட்டில் மாநிலத் தேர்தல் ஆணையர்கள் தங்கள் சட்ட நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
அனைத்து 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளும் இந்த தேசிய மாநாட்டில் பங்கேற்பார்கள்.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் தேர்தல் நடைமுறைகள் மற்றும் தளவாடங்கள் தொடர்பாக செயல்படுவதில் ஒரு நல்லுறவை ஏற்படுத்துவதாகும்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளர் தகுதி குறித்த தேர்தல் சட்டங்கள், சமீபத்தில் தொடங்கப்பட்ட இசிஐ நெட் டிஜிட்டல் தளம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போன்ற இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முயற்சிகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட்டின் சட்ட கட்டமைப்பிற்கு ஏற்ப வாக்காளர் பட்டியலை உருவாக்குதல் மற்றும் தேர்தல்களை நடத்துதல் ஆகியவற்றில் இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அனுபவ அறிவை வழங்கும். 73வது மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தங்களின் மூலம் மாநில தேர்தல் ஆணையங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் அதிகாரம் மற்றும் அனைத்து தேர்தல்களையும் மேற்பார்வையிடுதல், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் போன்ற அதிகாரங்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM