அமைச்சர் ஆர்.காந்தியை எச்சரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, 05 பிப்ரவரி (ஹி.ச.) இன்று காலை கைத்தறி மற்றும் கைத்திறன் தொழில்கள் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அந் நிகழ்வில் அமைச்சர் நேரு , தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்ற போ
Mks


சென்னை, 05 பிப்ரவரி (ஹி.ச.)

இன்று காலை கைத்தறி மற்றும் கைத்திறன் தொழில்கள் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அந் நிகழ்வில் அமைச்சர் நேரு , தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்ற போதும் துறையின் அமைச்சரான ஆர்.காந்தி பங்கேற்கவில்லை.

இந்நிலையில் அதன் பின்னர் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் நகராட்சி நிர்வாகத்துறை நிகழ்வில் பங்கேற்றார்.

அப்போது தயங்கித்.. தயங்கி அமைச்சர் ஆர்.காந்தி முதலமைச்சர் அருகே சென்று புத்தகம் வழங்க முயற்சித்தார்.

அந்த புத்தகத்தை கோபத்துடன் வாங்கி கொண்ட முதலமைச்சர் அமைச்சர் ஆர்.காந்தியுடன் கடுமையாக கடிந்து கொண்டார்.

அப்போது அமைச்சர் காந்தி ஏதோ கூற முற்பட , முதலமைச்சர் நான் பேசும் போது குறுக்கே பேச கூடாது என்பது போல் பதிலளித்தார்

மேலும் அமைச்சர் நேருவும் கோபமாக அமைச்சர் காந்தியை நோக்கி அமைதியாக இருக்குமாறு கூறினார்.

அதன் பிறகும் முதலமைச்சர் அமைச்சர் காந்தியை எச்சரிக்கும் வகையில் சில கருத்துகளை கூறினார்.

இன்று காலை கலைவாணர் அரங்கில் தனது துறை சார்ந்த நிகழ்ச்சியில் கூட பங்கேற்காமல் தாமதமாக தலைமைச் செயலகம் வந்ததால் அமைச்சரை , முதலமைச்சர் கடிந்து கொண்டிருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ