Enter your Email Address to subscribe to our newsletters

புலவாயோ, 5 பிப்ரவரி (ஹி.ச.)
16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதிப் போட்டி நேற்று புலவாயோவில் நடைபெற்றது.
இதில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் மஹூப் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய காலித் அஹ்மத்சாய் 31 ஓட்டங்களிலும், ஒஸ்மான் சதாத் 39 ஓட்டங்களிலும் வெளியேறினர். பின்னர் பைசல் ஷினோசாத், உசருல்லாஹ் நியசாய் இருவரும் திறம்பட விளையாடினர். பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர்.
நிலைத்து நின்று விளையாடிய பைசல் ஷினோசாத், உசருல்லாஹ் நியசாய் ஆகிய இருவரும் சதமடித்து அனைவரையும் கவர்ந்தனர். முடிவில், 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 310 ஓட்டங்கள் குவித்தது.
அதன் பிறகு, 311 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆரோன் ஜார்ஜ்- வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் புகுந்தனர். சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 68 ஓட்டங்கள் திரட்டினார்.
அடுத்து அணித்தலைவர் ஆயுஷ் மாத்ரே களம் இறங்கினார். அவர் 59 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் விளையாடிய ஆரோன் ஜார்ஜ் மிகச் சிறப்பாக விளையாடி சதமடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 104 பந்துகளில் 115 ஓட்டங்கள் சேர்த்தார்.
இந்திய அணி 41.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நாளை இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
Hindusthan Samachar / JANAKI RAM