சேலத்தில் தலைமை காவலர் பாலியல் சீண்டல், வேலியே பயிரை மேய்ந்தார் போல் உள்ளது - வானதி சீனிவாசன் கண்டனம்
சென்னை, 05 பிப்ரவரி (ஹி.ச.) பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கண்ணியமான பொறுப்பில் இருக்கும் காவலர் பாலியல் சீண்டல் ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார் இது தொடர்ப
Vanathi


Ye


சென்னை, 05 பிப்ரவரி (ஹி.ச.)

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கண்ணியமான பொறுப்பில் இருக்கும் காவலர் பாலியல் சீண்டல் ஈடுபட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

சேலம் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் காவலர் ஒருவர் உடன் பணிபுரியும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் வேலியே பயிரை மேய்ந்தது போல் உள்ளது.

அதுவும் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பிற்கென வலம் வரும் பிங்க் நிற ரோந்து வாகனத்தில் இத்தகைய கொச்சை செயலை செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கண்ணியமான பொறுப்பில் இருக்கும் காவலர் இதுபோன்ற அநாகரிக செயலில் ஈடுபட்டிருப்பது மொத்த காவல்துறைக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடியா திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கே சந்தி சிரிக்கும் வேளையில் அதனை கட்டுப்படுத்த வேண்டிய முதல்வரின் துறையோ எந்த அளவிற்கு கண்ணியக் குறைவுடன் செயல்படுகிறது என்பதற்கு சம்பவமே சாட்சி என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ