ஒலா, ஊபர் மற்றும் ராபிடோ பைக் ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்
புதுடெல்லி, 6 பிப்ரவரி (ஹி.ச.) ஆல் இந்தியா பிரேக் டவுன் எனும் பெயரில் நடத்தப்படும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தெலுங்கானா கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இதர தேசிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.
ஒலா, ஊபர் மற்றும் ராபிடோ பைக் ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்


புதுடெல்லி, 6 பிப்ரவரி (ஹி.ச.)

ஆல் இந்தியா பிரேக் டவுன் எனும் பெயரில் நடத்தப்படும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தெலுங்கானா கிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இதர தேசிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து

வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில்,ஆட்டோக்கள், டாக்சிகள் மற்றும் பைக் டாக்சிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக குறைந்தபட்ச அடிப்படை கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்களே தானாக கட்டணத்தை நிர்ணயிப்பதால், போக்குவரத்து தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

வணிகரீதியிலான பயணங்களுக்கு வெள்ளை நிற நம்பர் பிளேட் கொண்ட தனியார் வாகனங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / JANAKI RAM