Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 06 பிப்ரவரி (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ( 2011-2016 ) கு.லிங்கமுத்து ( 72) வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவர் செட்டிகுப்பம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியாத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b