Enter your Email Address to subscribe to our newsletters

ஜார்ஜியா, 6 பிப்ரவரி (ஹி.ச.)
16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதிற்குட்பட்டோருக்கானது) ஜிம்பாப்வே மற்றும் நமீபியா நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் இறுதி ஆட்டம் இன்று (6-ம் தேதி) நடைபெற இருக்கிறது. இதில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ளன.
இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு இந்த ஆட்டம் ஆரம்பமாகிறது.
இந்திய அணியானது இதுவரை 5 முறை யு19 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதாவது, 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து அணியானது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.
இதற்கு முன்பு அந்த அணி கடந்த 1998-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தது,என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM