Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 6 பிப்ரவரி (ஹி.ச.)
நாட்டில் நக்சல் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மார்ச் 31-ஆம் தேதியை இலக்கு தேதியாக நிர்ணயித்துள்ளது.
இதன் காரணமாக நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கட்சிரோலி வனப்பகுதியில் நக்சலைட்டுகள் சிலர் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நம்பகமான தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினரை கண்டவுடன், நக்சல் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த மூன்று நபர்கள் கொல்லப்பட்டனர். அந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையின்போது, இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Hindusthan Samachar / JANAKI RAM