பிரதமர் யாருக்கும் பயந்தவர் கிடையாது,பாகிஸ்தானுக்கே அவர் பயந்தவர் கிடையாது - தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை, 06 பிப்ரவரி (ஹி.ச) 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தெலுங்கு செட்டி தெருவில் உள்ள சி
தமிழிசை


சென்னை, 06 பிப்ரவரி (ஹி.ச)

2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தெலுங்கு செட்டி தெருவில் உள்ள சிறு கடை வியாபாரிகளிடம் தேர்தல் அறிக்கை குழு தரப்பில் கருத்து கேட்டடார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்ததாவது;

வடசென்னை மிட்டாய் வியாபாரிகள் சங்கம், சென்னை மிட்டாய் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மக்களுக்காக மக்களிடம் இருந்து என்பதற்கு ஏற்ப பாஜக தேர்தல் அறிக்கை அவர்கள் இடத்திற்கே சென்று கோரிக்கைகளை கேட்டு தெரிந்து கொள்கிறோம். இதற்கடுத்து காஞ்சிபுரம் நெசவாளர்கள் சந்தித்து கேட்க உள்ளோம்.

இங்கு கூட பீகார் சகோதரர் தான் கடலை மிட்டாய் செய்யும் பணியில் உள்ளார். டேபிள் தொடைக்கிறார்கள் என்று பேசுகிறார்கள் இப்படி எல்லாம் அமைச்சர்களே பேசக் கூடாது.

வந்தாரை வாழ வைப்பது தமிழகம் வந்தவர்களை நிந்தனை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் மத்திய அரசு நேரடியாக ஜிஎஸ்டி வரியை விதிப்பதில்லை.

ஏற்கனவே இருந்த 16 வரிகளை சேர்த்து தான் ஜி எஸ் டி வரி விதிக்கப்படுகிறது. ஜனநாயக முறைப்படி ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய மாநில நிதியமைச்சர்கள் பரிந்துரை அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்பட்டது.

பேக்கிங் 18% ஜி எஸ் டி வரி உள்ளது அதை குறைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து வைக்க தயாராக உள்ளோம்.

ஜிஎஸ்டி வரி மாநில அரசு நிதி அமைச்சர் அறிவு புறத்தலின் பேரிலும் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது அதிலிருந்து சரியான பங்கு மாநில அரசுக்கு வருகிறது அதனால்தான் மாநிலம் வளர்ச்சி அடைகிறது.

100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்கள் ஆக மாற்றியதை பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். தமிழ்நாடு மறுபடியும் இந்த 125 நாள் வேலை நாட்களில் பிரச்சனை செய்து நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால் கூட்டணி கட்சியினர் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

கிராமப்புறங்களில் 125 நாட்கள் ஆக்குவது போல் நகரத்திலும் ஏற்படுத்த கேட்டுள்ளார்கள் அதை எங்கள் தலைமையிடம் கொண்டு சேர்க்கிறோம். தங்களிடம் பணிபுரிபவர்களுக்கு தேவைக்கு ஏற்ற வீடு வாழ்வாதாரம் கோரிக்கைகளையும் சேர்த்து முன் வைத்துள்ளார்கள். அதுதான் தமிழ்நாடு தொழில் முனைவோர்களின் பரந்த மனப்பான்மை.

ஐரோப்பிய இந்தியா ஒப்பந்தம் எல்லா ஒப்பந்தங்களுக்கும் தாய் ஒப்பந்தம் என்று ஐரோப்பிய அதிபர் சொல்கிறார். எங்க தேர்தல் அறிக்கையை தாய் அறிக்கை என்று நாங்கள் சொல்கிறோம். அகில உலகமாக இருந்தாலும் தாய்க்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுக்கப்படுகிறது.

வறுமை கோட்டை நீக்கவில்லை என்று நேற்று பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார்கள். 50 கோடி மக்களுக்கு மேல் வறுமை கோட்டிற்கு மேல் வந்துள்ளார்கள் இதனால்தான் உலகமே பாரத தேசத்தை கொண்டாடிக் கொண்டுள்ளது. பாரத தேசத்தை அகில உலகம் கொண்டாடுகிறோம் ஆனால் பாராளுமன்றத்தில் பலருக்கு கொண்டாட மனமில்லை.

இங்கு இருந்து வருபவர்கள் சண்டை மட்டுமே போட வேண்டும் என்று இலக்கு இல்லாமல் எல்லா கோரிக்கைகளையும் எடுத்து சொல்லி நியாயமாக பேசினால் பகிர்ந்து செயல்படுத்த முடியும். சிறுதொழில் பெரிய தொழில் என எல்லோருக்கும் மன கோரிக்கையை போய் நின்று கேட்டு எல்லா துறை மக்களுக்காகவும் சிந்திக்க முடியுமா என்று யோசிக்கும் அளவிற்கு எங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கும்.

தமிழ்நாடு முதல் நாளை முதல் மக்களிடம் கோரிக்கை பெட்டிகள் வைத்து வேறு கட்சிகள் வேறு வேறு பெட்டிகள் வைத்திருக்கலாம். நாங்கள் கோரிக்கை பெட்டிகள் 52 வாகனங்கள் நாளை துவங்க உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் அவர் அவர் இடங்களில் இருந்து தலைவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்கள். நான் டென்ஷனை மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறேன் அதேபோல் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் என எல்லோரும் தொடங்கி வைக்கிறார்கள்.

மக்களுக்கான மக்களிடம் இருந்து செயல்படும் கட்சி பாரதிய ஜனதா கட்சி என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இருக்கும் இடத்திலிருந்து உங்களுக்கு கோரிக்கைகளை 7878786060 எண்ணில் லிங்க் கொடுக்கப்படும் அதன் மூலம் இணைய பக்கத்தில் கோரிக்கையை பதிவு செய்து கொள்ளலாம்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னாலேயே மக்களிடம் நாங்கள் எப்படி செல்கிறோம் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணி அண்ணன் எடப்பாடி யார் முதலமைச்சராக கொண்டு பிரதமர் வழிகாட்டுதலுடன் டபுள் இன்ஜின் அரசாக வரும் போது எவ்வளவு சூப்பர் பாஸ்ட் இன்ஜினாக செயல்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.15 ஆம் தேதி கோரிக்கைகளை கூட்டி ஒன்றிணைபோம்.

பிரதமர் பயந்து கொண்டுள்ளார் என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு, மனதிற்கு வேதனையாக உள்ளது. சபாநாயகர் ஒரு கருத்தை சொல்கிறார் என்றால் தெரியாமல் சொல்ல மாட்டார். அண்ணன் அப்பாவு போல் இல்லை. ஆளுநர் வரும் போது மைக் ஆப் செய்பவர் இல்லை. அப்படிப்பட்ட சபாநாயகரை வைத்துக்கொண்டு ஓம் பிர்லாவை பற்றி பேசுவதே தவறு.

பிரதமர் எதற்குமே பயந்தது கிடையாது, பாகிஸ்தானுக்கே பயந்தவர் கிடையாது. சீனாவுக்கு 36 சதவிகிதம் வரை உள்ளது எல்லாவற்றையும் விட இந்தியாவுக்கு வரி விகிதம் குறைவாக உள்ளது. உன்னிடமிருந்து ஏற்றுமதி அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.

இங்கு உள்ள ஆட்சியாளர்களுக்கு குறை சொல்லி கொண்டே இருக்க வேண்டும் . ஒட்டு மொத்தமாக சிறுதொழில் செய்பவர்கள் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ஏற்றுமதி செய்பவர்கள் நம்முடன் செய்பவர்களை விட நமக்கு வரி குறைவாக உள்ளது. உங்களுக்கு எல்லாம் தந்திரம் தான் தெரியும் ராஜ தந்திரம் மோடிக்கு தான் தெரியும்.

125 நாள் வேலை வாய்ப்பு திட்டம், விஸ்வகர்மா திட்டம் கைத்தொழில் செய்பவர்களுக்கான திட்டம், புதிய கல்விக் கொள்கை எல்லாவற்றையும் தொடங்குங்கள் மக்கள் பயன்பெறுவார்கள்.

அண்ணன் எடப்பாடியார் ஆட்சிக்கு நிச்சயம் வந்து விடுவோம் அதனால் தேர்தல் அறிக்கை கொடுப்போம் என்று கொடுத்திருக்கிறார்கள் அரசாங்கத்திற்கு வந்தால் நல்லது செய்வோம் என்று கொடுத்திருக்கிறார் பாஜகவை வரவேற்கிறது. கமலஹாசன் உரையை படிக்க வேண்டும் என்றால் கோனார் உரையை வைத்து தெளிவுரை படிக்க வேண்டும்.

என்ன பேசினார் எதுவுமே காதில் உலகம் விழவில்லை என்ன மொழி பேசினார். எதுவும் புரியவில்லை. நமக்கு புரியவில்லை என்பது ஒன்று பெரியார் சொன்னதை நிர்மலா சீதாராமன் அவர்கள் சொல்லியதாக சொல்லி அதற்கு அவர் பதில் அளித்ததாக பரப்பி வருகிறார்கள். பெரியார் வழித் தோன்றல்கள் பெரியார் சொல்லியது தான் அவர் கிண்டல் என்பது தெரியாமல் பதிலடி கொடுத்திருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் பிச்சை வாங்கும் மொழி இல்லை என்று பெரியாருக்கு தான் பதில் சொல்லி உள்ளார். பெரியார் என்ன சொன்னார் என்று பெரியார் பக்தர்களுக்கு தெரியவில்லை பக்தர் என்று சொல்லக்கூடாது ஏனென்றால் அது எங்களின் வார்த்தை அவர்களுக்கே தெரியவில்லை.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நெடுநாள் இருந்துவிடலாம் என்று கனவு காணாதீர்கள் யாரை சொல்கிறீர்கள். 2026 தேர்தல் எங்கு வருகிறது. ஸ்டாலின் பார்த்துக்கொண்டே இருந்தவர் அய்யய்யோ இவரை நாம் பாராட்டு அனுப்பினால் யாரும் ஆட்சி அதிகாரத்தில் அதிக நாட்கள் இருந்து விட முடியாது என்று வேட்டு வைக்கிறார் என நினைத்திருப்பார்.

திமுக சில தவறுகள் செய்யும் மன்னிக்க முடியாத பல தவறுகளை செய்யும் அதில் கமல்ஹாசனை பாராளுமன்றம் அனுப்பியது மிகப்பெரிய தவறு. சினிமாவில் டயலாக் பேசி கொண்டு இருந்தவர் தெரியாத டயலாக்கை தவறாக பேசி கைதட்டு வாங்குகிறேன் என்று அங்கு டிராமா போட்டுக்கொண்டு வருகிறார்.

தமிழ்நாடு தலை குனிந்து கொண்டு உள்ளது. அறிஞர் அண்ணா காமராஜர் போன்றவர்கள் இருந்த பாராளுமன்றம் இவர்களை அனுப்பி கேலிக்கூத்தாக ஏற்படுத்தி இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் என்றுதான் சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam