Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 06 பிப்ரவரி (ஹி.ஸ.)
பிரதமர் அருங்காட்சியகத்தில் இன்று தேசிய உருது மொழி வளர்ச்சி கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் உலக உருது மாநாடு தொடங்கியது.
பன்மொழி இந்தியாவில் உருது மொழியும் பண்பாடும்” என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த மாநாடு தீபம் ஏற்றி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் வெளி விவகார இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் தாரிக் மன்சூர்,மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சயீத் ஐனுல் ஹசன், ஜஷ்ன்-எ-பஹார் டிரஸ்ட் நிறுவனர் காம்னா பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேசிய உருது கவுன்சிலின் இயக்குநர் டாக்டர் ஷம்ஸ் இக்பால் அனைவரையும் ஷால் அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி வரவேற்றார்.
தமது வரவேற்பு உரையில் அவர்,
இந்தியாவில் பேசப்படும் எண்ணற்ற மொழிகளில் உருது பல வகைகளில் தனித்துவமானது.
உருதுவிற்கு தனிப்பட்ட ஒரு பகுதி இல்லை,ஆனால் அது நாட்டின் எல்லா பகுதிகளிலும் பேசப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது.
2047 ஆம் ஆண்டு இந்தியா ‘வளர்ந்த இந்தியா’வாக கொண்டாடப்படும் போது, நாட்டின் மொழிகளின் பங்கும் முக்கியமானதாக இருக்கும்.
எனவே,உருது மொழியின் வளர்ச்சிக்காக அதை புதிய தொழில் நுட்பங்களுடன் இணைத்து, காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாற்ற வேண்டும்,என்றார்.
மேலும் மாநாட்டின் தலைப்பில் அம்சங்களை பற்றி விளக்கி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த மாநாட்டை நடத்த உதவிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் இந்திய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட எம்.ஜே. அக்பர்,
நான் உருது மொழியை என் தாயிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
உருது என்பது வெறும் அன்பால் மட்டும் வருவதில்லை.
அதற்காக ஒரு ஆர்வமும் ஈடுபாடும் தேவை.
உருது எந்த ஒரு மதத்திற்கும் சொந்தமான மொழி அல்ல, ஆனால் 1947 ஆம் ஆண்டு நிகழ்ந்த துயர சம்பவங்கள் இந்த தவறான புரிதலை ஏற்படுத்தின.
இந்த குழப்பத்திற்கு நாம் ஆளாகக்கூடாது,இன்று நாம் அமர்ந்திருக்கும் இந்த அரங்கில் உருதுவை நம்பும் மற்றும் ஏற்றுக்கொள்ளும் பலர் இருக்கின்றனர்.
உருது எங்கள் அடையாளம். அது இல்லாமல் இந்தியா பலவீனமடையும். இது அன்பின் மொழி. புத்தகக் கண்காட்சிகளின் வெற்றி இதன் வாசகர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்துகிறது. உருதுவை பற்றிய நம் மனமும் சிந்தனையும் தெளிவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
காம்னா பிரசாத்,
கூறுகையில்,
உருது மொழியின் இருப்பு இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் நாகரிகங்களின் கலவையால் உருவானது. அரபி, பாரசீகம், சமஸ்கிருதம் மற்றும் பிற மொழிகளின் கலவையால் உருது மேலும் இனிமையானதாக மாறியுள்ளது.
சில இடங்களில் உருது அன்பின் வெளிப்பாட்டு மொழியாக இருந்தது.
சில இடங்களில் அது சுதந்திரப் போராட்டத்தின் குரலாகவும் இருந்தது. மொழிகளின் கலப்பு காலத்திற்கேற்ப தொடர்ந்து நடைபெறுகிறது என்றார்.
பேராசிரியர் சயீத் ஐனுல் ஹசன் பேசியதாவது,
உருதுவின் இனிமை, நகைச்சுவை, உணர்ச்சி வெளிப்பாடு போன்ற தனித்தன்மைகளை எடுத்துரைத்தார்.
திரைப்படப் பாடல்கள் உருதுவின் மென்மையான அழகை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளன என்றும் கூறினார்.
பேராசிரியர் தாரிக் மன்சூர்,
உலக உருது மாநாட்டின் ஏற்பாட்டை பாராட்டினார்.
இந்தியா மொழிகளின் பாரம்பரியத்தில் மிகவும் வளமான நாடு.
தேசிய உருது கவுன்சில் நாட்டின் பல நகரங்களில் நடத்திய புத்தகக் கண்காட்சிகள் உருதுவின் பிரபலத்திற்கான சான்றாக உள்ளன.
உருதுவை பாதுகாக்க அதன் எழுத்துருவை காப்பதும் அதை கற்றுக்கொள்வதும் மிகவும் முக்கியம்.
தேசிய கல்விக் கொள்கை 2020 தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
உருது பேசும் மக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உருது முழுமையாக இந்திய மொழி,இது எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் சொந்தமானது அல்ல என்றார்.
இந் நிகழ்ச்சியில் தேசிய உருது வளர்ச்சி கவுன்சில் வெளியிட்ட வளர்ந்த இந்தியாவின் பார்வை மற்றும் உருது மொழி” என்ற நூலும் வெளியிடப்பட்டது.
இந்த நூல் முந்தைய உலக உருது மாநாடு மற்றும் பாட்னா கருத்தரங்கில் வழங்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும்.
தொடக்க நிகழ்ச்சியை டாக்டர் ஹஃபீஸுர் ரஹ்மான் நடத்தினார்.
நன்றியுரையை டாக்டர் ஷமா கவுசர் யஸ்தானி வழங்கினார். நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.
தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் எம்.ஏ. அன்சாரி அரங்கில் “ஹ்யூமர்பாஸ்” என்ற தலைப்பில் நகைச்சுவை கலாச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் பிரபல நடிகர் மற்றும் நகைச்சுவை கலைஞர் ரஹ்மான் கான் தனது குழுவுடன் சிறப்பான நிகழ்ச்சியை வழங்கினார்.
இதில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த விருந்தினர்கள் மற்றும் உருது மொழி ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV