Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 6 பிப்ரவரி (ஹி.ச.)
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கின்ற கடன்களுக்கான வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் ஆகும்.
ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, ரெப்போ வட்டி விகிதம் சம்பந்தமாக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்கிறது.
அதன்படி, மூன்று நாள் நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பின்னர் ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது.
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இன்றி, இது 5.25% ஆகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் சீராக உள்ளது. எனவே, தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் 5.25 சதவீதமாகவே தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நிறைவு பெற்ற இந்திய மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக உடன்படிக்கை மற்றும் இறுதி கட்டத்தில் இருக்கின்ற இந்தியா-அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை ஆகியவை ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.
அடுத்த நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் முறையே 6.9 சதவீதம் மற்றும் 7 சதவீதமாக இருக்கும்.
என்று கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM