40 கோடி மதிப்பிலான கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா - அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பங்கேற்பு
விருதுநகர், 06 பிப்ரவரி (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பிஏசிஆர் அரசு மருத்துவமனை வளாகத்தில் விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தி 40 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டிடத்தை தமிழக மு
new hospital building


விருதுநகர், 06 பிப்ரவரி (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பிஏசிஆர் அரசு மருத்துவமனை வளாகத்தில் விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தி 40 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட புதிய மருத்துவமனை கட்டிடத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றி கல்வெட்டுத் திறந்தார் .

இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் , சீர் மரபினர் நலவாரிய துணைத் தலைவர் ராஜா அருன்மொழி, தலைமை மருத்துவர் உமா ஜெயபாஸ்கர் மற்றும் நகர செயலாளர் பேங்க் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா. யூனியன் முன்னாள் சேர்மன், சிங்கராஜ் சேத்துர் பேரூராட்சி சேர்மன் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கிணையாக இராஜபாளையம் PACA மருத்துவமனையில் புதிதாக 40 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் நவீன வசதிகளுடன் கூடிய கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் நவீன இயந்திரங்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மருத்துவர்கள் விரைவில் முதலமைச்சர் நியமனம் செய்வார் . 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ளதால் வேகமாக இந்த கட்டிடங்களை திறந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

பல்நோக்கு பணியாளர்கள் போராட்டம் குறித்து கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என கூறினார்

Hindusthan Samachar / vidya.b