Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை சூளைமேடு பகுதியில் 109 வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அதிகாரிகள் உடனடியாக தொடங்காவிட்டால், பொதுமக்களுடன் இணைந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன் என காங்கிரஸ் பெண் கவுன்சிலர் சுகன்யா செல்வம் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
சென்னை மாநகராட்சி, 109-வது வார்டுக்கு உட்பட்ட அமர்ஜான் தெருவில் வசிக்கும் பொதுமக்கள், அப்பகுதி கவுன்சிலர் சுகன்யா செல்வத்திடம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தாமதமாவதாக புகார் அளித்தனர்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பே பூமி பூஜை போடப்பட்டும், இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதாகவும் பெண்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.
இதற்கு பதிலளித்த வார்டு கவுன்சிலர் சுகன்யா செல்வம், கடந்த மழைக்காலத்தில் இந்த தெருவில் தண்ணீர் தேங்கி, மின்சார பெட்டிகளில் (EB Box) தீப்பொறி ஏற்பட்டு மக்கள் எவ்வளவு அவதிப்பட்டார்கள் என்பதை நான் நேரில் பார்த்தேன்.
அதனால்தான் மன்றத்தில் குரல் கொடுத்து, இந்த திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வாங்கினேன்.
கடந்த செப்டம்பர் மாதமே பூஜை போடப்பட்டது, ஆனால் இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ