Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 07 பிப்ரவரி (ஹி.ச.)
2026ல் தவெக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று விருப்பம் மனு பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று பனையூர் அலுவலகத்தில் விருப்ப மனு வாங்க பல மாவட்டங்களில் இந்து ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானேர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் விருப்பமான கொடுக்க தொடங்கிய இரண்டு மணி நேரத்திலேயே 10,000 விருப்பம் மனுக்கள் விற்று தீர்ந்ததாக கூறி மீண்டும் இன்று வழங்கப்படும் என அறிவித்து கூட்டத்தை கலைந்து செல்ல நிர்வாகிகள் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு விருப்பம் அணுக்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விநியோக செய்யப்படுவதாகவும், நேரில் யாரும் வர வேண்டாம் என்று கட்சியின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தபால் மூலமாக அனுப்ப கட்சி தலைமை அறிவுறுத்தி இருந்தது.
இந்த தகவல் தெரியாத சில நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழக தலைமை அலுவலகத்திற்கு இன்றும் படை எடுத்தனர், பேருந்துகள் மூலமாக வந்திரங்கிய அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினார்.
மேலும் பல நிர்வாகிகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் அந்த பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருபவர்களை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்
Hindusthan Samachar / P YUVARAJ