மோடியின் அமெரிக்கப் பயணத்தைவிட ட்ரம்ப்பின் இந்திய பயணம் வெற்றி பெற்று விட்டது - காங்கிரஸ் விமர்சனம்
புதுடெல்லி, 07 பிப்ரவரி (ஹி.ச.) இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பட்டியலிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவ
மோடியின் அமெரிக்கப் பயணத்தைவிட, ட்ரம்ப்பின் இந்திய பயணம் வெற்றி பெற்றுவிட்டது - காங்கிரஸ் விமர்சனம்


புதுடெல்லி, 07 பிப்ரவரி (ஹி.ச.)

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பட்டியலிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,

இந்திய - அமெரிக்க கூட்டறிக்கை, விவரங்கள் குறித்து மவுனம் சாதிக்கிறது. எனினும், வெளியிடப்பட்ட தகவல்களிலிருந்து பின்வரும் விஷயங்கள் தெளிவாகின்றன:

1. இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யாது. இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கினால், 25% அபராதம் மீண்டும் விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

2. இந்திய விவசாயிகளின் நலனைப் பலிகொடுத்து, அமெரிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையில் இந்தியா இறக்குமதி வரிகளைக் குறைக்கும்.

3. அமெரிக்காவிலிருந்து இந்தியா செய்யும் வருடாந்திர இறக்குமதிகள் மூன்று மடங்காக உயர்ந்து, நமது நீண்டகால வர்த்தக உபரியை இல்லாமல் ஆக்கிவிடும்.

4. அமெரிக்காவுக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற சேவைகளின் ஏற்றுமதி விஷயத்தில் நிச்சயமற்ற நிலை தொடரும்.

5. அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு முன்பை விட அதிக வரிகள் விதிக்கப்படும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் நெருக்கம் காட்டுவதற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. மோடியின் அமெரிக்கப் பயணத்தைவிட, ட்ரம்ப்பின் இந்திய பயணம் வெற்றி பெற்றுவிட்டது. நண்பன் (ரஷ்யா) இனி நண்பன் இல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b