Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 7 பிப்ரவரி (ஹி.ச.)
கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள செம்மண்ட் பிராந்தியத்தில் வெங்காயம் ஏற்றிச் செல்லும் லாரியில் வெடிமருந்துகள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் நேற்று இரவு கடுமையான வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, செம்மண்ட் பகுதியில் அமைந்துள்ள செங்கல் சூளையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வெங்காயம் ஏற்றிச்சென்ற லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
அதன் விளைவாக, அந்த லாரியில் இருந்த வெங்காய பொதிகளை இறக்கிவிட்டு காவல்துறையினர் சோதனையிட்டனர்.
அப்பொழுது, லாரியில் வெங்காய பொதிகளுக்கு நடுவே வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 10,000 ஜெலட்டின் குச்சிகள், கம்பிகள், டெட்டனேட்டர்கள், வெடிமருந்து உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஒருவரை கைது செய்தனர்.
சட்டவிரோதமான சுரங்க நடவடிக்கையில் ஈடுபடுத்த இந்த வெடிபொருட்கள் கடத்தி வரப்பட்டதாக காவல்துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM