இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு
புதுடெல்லி, 07 பிப்ரவரி (ஹி.ச.) இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிக வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பைகள் இறுதி செய்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு


புதுடெல்லி, 07 பிப்ரவரி (ஹி.ச.)

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிக வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பைகள் இறுதி செய்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

ஒரு தற்காலிக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு, பரஸ்பர நன்மை பயக்கும் இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பங்காளித்துவத்தை நனவாக்கும்.

இந்தக் கட்டமைப்பு நமது ஏற்றுமதியாளர்களுக்கு அதிக சந்தை அணுகலையும் வாய்ப்புகளையும் உறுதி செய்யும். 'மேக் இன் இந்தியா' திட்டத்தை மேலும் ஊக்குவிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்த இடைக்கால ஒப்பந்தம் குறித்து எக்ஸ் தளத்தில் கூறுகையில்,

இந்த இடைக்கால ஒப்பந்தம் இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியாவும் அமெரிக்காவும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த உதவும்.

இந்தக் கட்டமைப்பு, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் சந்தையில் அணுகலை வழங்கும். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்

என்று அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b