காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் மாசி திருவிழா தொடக்கம் - மார்ச் 1 ஆம் தேதி வெள்ளித் தேரோட்டம்
காஞ்சிபுரம், 07 பிப்ரவரி (ஹி.ச.) கோவில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரம் நகரத்திற்கு மிக முக்கிய அடையாளமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசித்திருவிழா வரும் பிப்ரவர
காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் மாசி திருவிழா தொடக்கம் -  மார்ச் 1 ஆம் தேதி வெள்ளித் தேரோட்டம்


காஞ்சிபுரம், 07 பிப்ரவரி (ஹி.ச.)

கோவில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரம் நகரத்திற்கு மிக முக்கிய அடையாளமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.

அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசித்திருவிழா வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இவ்விழாவிற்கான பந்தல் கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. மகாசக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா சிறப்பாக நடை பெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான மாசித்திருவிழா வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி காலை 5.15 மணி முதல் 6.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இதனையொட்டி கோயில் நுழைவு வாயிலில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

பந்தகால்களுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்கார தீபாராதனைகள், விநயாகா் பூஜை ஆகியனவும் நடைபெற்றன.

நிகழ்வில் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா்,மணியக்காரா் சூரியநாராயணன் மற்றும் ஆலய ஸ்தானீகா்கள் கலந்து கொண்டனா்.

பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தினசரி காலையிலும், மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வரவுள்ளாா். பிப்ரவரி 23-ஆம் தேதி தங்க சிம்ம வாகனத்திலும், மாா்ச் 1 ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.

மாா்ச் 4- ஆம் தேதி விஸ்வரூப தரிசனமும், அதனைத் தொடா்ந்து விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் உத்தரவின்படி ஆலய நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

Hindusthan Samachar / vidya.b